Additional information
Format | |
---|---|
Imprint | |
Author |
எம்.கோபாலகிருஷ்ணன்
மனைமாட்சி – எம்.கோபாலகிருஷ்ணன்தமிழினி
₹690
In stock
Format | |
---|---|
Imprint | |
Author |
You must be logged in to post a review.
ஜெயமோகன்
யதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை நோக்கி இறங்குகின்றன. அந்த ஆழமே மாயமென இக்கதைகளில் நிறைந்துள்ளது. வரலாற்றின் வழியாகச் செல்கின்றன இக்கதைகள். அன்றாடத்தில் பரவி விரிகின்றன. ஒரு கணத்தில் தாவி எழுந்து தங்கள் முழுமையை அடைகின்றன. அங்கே தொன்மமோ கவிதையோ என மாறிவிடுகின்றன. – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹360ஜெயமோகன்
1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200ஜெயமோகன்
இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை. இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம். நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம். வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் மெய்யான வரலாற்றுநாயகர்கள் வெவ்வேறு விசைகளை திறம்படச் சமன் செய்து பயனுள்ள ஆட்சியை அளித்தவர்களே. அவர்களில் பலர் அரசியர். இந்த கதைகள் வரலாற்றை இன்றைய […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210ஜெயமோகன்
1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200ஜெயமோகன்
தமிழ்ச்சூழலிலேயே ஒருபாலுறவு ஈர்ப்பு கொண்டவர்கள் பலர் இருப்பதும், இங்குள்ள சமூகநோக்கு அவர்களை ஒரு தலைமறைவுச் சமூகமாக ஆக்கியிருப்பதும் இணைய ஊடகம் வந்த பின்னரே தெரியவந்தது. ஜெயமோகனின் இணையதளத்தில் வந்த கடிதங்களில் இருந்து தொகுக்கப்பட்ட இத விவாதங்களில் பல தளங்களில் இருந்து குரல்கள் ஒலிக்கின்றன.
”என்னுடைய பார்வை எப்போதுமே தெளிவானது. நான் பாலியல், ஒழுக்கவியல் கொண்டு மனிதர்களை அளவிடுவதில்லை. சமூகப்பங்களிப்பைக் கொண்டே அளவிடுகிறேன். ஒருவர் தன் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்வது அப்பங்களிப்பின் வழியாகவே. அதை இயற்றுவதற்குரிய வாழ்க்கையை அவர் அமைத்துக்கொண்டார் என்றால் அதுவே உகந்த வாழ்க்கை” என்று ஜெயமோகன் இவ்வுரையாடலைத் தொகுக்கும்போது குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹90அறிவின் பொருளாக அறியப்பட்டிருக்கும் அந்த ஒன்று எது? ஒட்டுமொத்த நிகழ்வில் அறிவு ஒரே சமயத்தில் அறிபடுபொருளாகவும், அறிபவராகவும், அறிவாகவும் செயலாற்றுவது எங்ஙனம்? ‘அறிவு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்நூலிலுள்ள பதினைந்து பாடல்களின் வழியாக நாராயண குரு, மெய்யியல் தத்துவத்தை அறிவுப்புலம் சார்ந்த நோக்கில் முன்வைக்கிறார். நாராயண குருவின் வழித்தோன்றலான குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்து உரையெழுதிய இந்த தனிச்சிறந்த ஆய்வியல் சிறுநூல், எழுத்தாளுமை எம். கோபாலகிருஷ்ணன் அவர்களால் தமிழில் செழுமையுற மொழிபெயர்க்கப்பட்டு, தன்னறம் நூல்வெளி […]
தன்னறம்
₹80முனைவர் லோகமாதேவி
மெக்ஸிகோவின் நீலக்கற்றாழை வயல்களுக்கும் ஜப்பானின் அரிசி மது ஆலைகளுக்கும், கோவாவின் முந்திரிதோப்புகளுக்கும் அழைத்துச் செல்லும் அத்தியாயங்கள், குன்றிமணி என்னும் கொல்லும் அழகு, சாக்ரடீஸை கொன்ற தாவர நஞ்சு, இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் புல்லரிசிப்பூஞ்சை. தாடிக்குள் ஒளிந்து கொண்டு இந்தியாவுக்கு வந்த காபிக்கொட்டை என்று தாவர உலகின் பல ரகசியங்களை, பல புதிய தகவல்களை பேசும் நூல்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹500
Reviews
There are no reviews yet.