லலிதாம்பிகா அந்தர்ஜனம்

அக்கினி சாட்சி

சாகித்ய அகாதெமி

100

In stock

Description

கேரளத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நம்பூதிரி குடும்பங்களில் நிலவி வந்த இறுக்கமான நம்பிக்கைகள், சடங்குகள் பற்றியும், பெண்ணடிமைத்தனம் பற்றியும் மிகவும் யதார்த்தமாகச் சொல்லும் நாவல். நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும் கூட சுதந்திரமற்றவர்களாக, குடும்பத்தில் மூத்தோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, வழிபாடு, சடங்குகளைச் செய்து கொண்டு வாழ்பவர்களாக இருந்திருக்கின்றனர். அப்படி வாழ்ந்த ஒரு நம்பூதிரியின் மனைவி, அங்கிருந்த அடக்குமுறைகள் பிடிக்காமல், கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீடு வருகிறாள். நம்பூதிரி குடும்பம் அவளை ஒதுக்கி வைக்கிறது. எனினும் அந்தப் பெண், பெண்களின் உரிமைகளுக்காக, சாதி வேற்றுமைக்கு எதிராகக் குரல் கொடுத்து, பொதுவாழ்க்கையில் நுழைந்து, அன்றைய சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறாள். பின்னர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அதற்குப் பிறகு ஆன்மிகத்திலும் ஈடுபட்டு துறவியாகிறாள். அதேபோன்று அந்தப் பெண்ணின் கணவனின் தங்கையும், படித்து முன்னேறி நல்லநிலைக்கு வர பெற்றோருடன் முரண்படுகிறாள். அவளுக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து, துறவியான பெண்ணைச் சந்திக்கிறாள். அதோடு நிறைவடைகிறது இந்த நாவல். கேரள நம்பூதிரி சமூகத்தின் ஒரு காலத்திய வாழ்க்கைமுறையை கண்முன் நிறுத்தும் இந்த நாவலைப் படிக்கும்போது அந்தக் காலத்திற்கே நாம் போய்விடுகிறோம் என்பதே உண்மை.

Additional information

Format

Imprint

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “அக்கினி சாட்சி”

Most viewed products

Recently viewed products